tamilnadu

img

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை - ரிசர்வ் வங்கி

ரெப்போ வட்டி விகிதம் 5.15 சதவீதமாகவே தொடரும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நிலவும் பொருளாதார மந்த நிலை காரணமாக,  தொழில் துறை வளர்ச்சி, ஆட்டோமொபைல் விற்பனை சரிந்தது. அதே சமயம் வேலையின்மை மற்றும் நுகர்வோரின் பணவீக்கம் ஆகியவை அதிகரித்து காணப்பட்டது. கடந்த 2019-ஆம் ஆண்டில் மட்டும், இந்தியப் பொருளாதார சரிவை சமாளிக்க, ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை சுமார் 1.35 சதவிகிதம் வரை குறைத்தது. தொடர்ந்து வட்டி விகிதங்களைக் குறைத்தும் இந்தியப் பொருளாதாரத்தில் மத்திய அரசும், மத்திய ரிசர்வ் வங்கியும் எதிர்பார்த்த வளர்ச்சி காண முடியவில்லை.

இந்நிலையில் இன்று நடைபெற்ற, 2020-ஆம் ஆண்டின் மத்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் கூட்டத்தில், ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என்றும், ரெப்போ வட்டி விகிதம் 5.15 சதவீதமாகவே தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.